- "பொருநை நெல்லை புத்தக திருவிழா-2022" இன்று துவக்கம்.
- 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெறும் "பொருநை நெல்லை புத்தக திருவிழா - 2022" பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு மேல் துவங்குகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த விழாவை, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு.அப்பாவு அவர்கள் துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
இன்று துவங்கி வரும் 27/03/2022 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 110 புத்தக நிலையங்களும், பொருநை நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் தினமும் நாட்டுப்புறக்கலைகள், கருத்தரங்கங்கள், குறும்படம் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இந்த புத்தக திருவிழாவில் 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயனடையலாம்.
Image source: facebook.com