செய்திக்குறிப்புகள்:
தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள்.
திருநெல்வேலி மாவட்ட வீரர்கள் 101 பதக்கங்கள் வென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 02/03/2022 அன்று முதல் 05/03/2022 வரை நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்குபெற்று 101 பதக்கங்களை வென்று சாதனை படைத்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நேற்று சிறப்பான வரவேற்பும், பாராட்டுகளும் அளிக்கப்பட்டது.
தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 18 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என மொத்தம் 1260 பேர்கள் கலந்து கொண்டார்கள். இதில் திருநெல்வேலி மாவட்ட அமெச்சூர் சிலம்பாட்ட கழகம் சார்பில் 114 வீரர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று 32 தங்கப்பதக்கங்கள், 31 வெள்ளிப்பதக்கங்கள், 38 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.