தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாமிரபரணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையினால் தாமிரபரணியில் உள்ள முக்கிய அணைகளான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்றும் மலைப்பகுதிகளில் நன்றாக மழை பெய்ததாலும், பாபநாசம் அணையில் இருந்து 1561.33 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தாமிரபரணியில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கல்யாண தீர்த்தம் மற்றும் அகத்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பாய்ந்தோடியது.