செய்தி சுருக்கம் :
- நெல்லையில் புதிய நவீன பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை தொடங்கியது
- பஸ் நிறுத்தம் பூமி பூஜையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ பங்கேற்றார்.
செல்வாக்கு, புகழ் இருந்தாலும் மக்கள் நினைப்பதை உணர்ந்து செயலாற்றும் நலன் படைப்பதில் எம்எல்ஏக்களின் பங்கு நிறைவாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மகத்தான சில பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இதன்படி பாளையங்கோட்டை நவீன பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. இதில் அப்துல் வகாப் எம். எல் ஏ பங்கேற்றார்.
பாளையங்கோட்டை கதீட்ரல் பள்ளி அருகே நன்கொடையாளர்கள் பங்களிப்பு மூலமாக நவீன பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை அடிகோல் நாட்டு விழா நடைபெற்றது .
இதில் மாவட்ட திமுக செயலாளர் எம்.எல்.ஏ அப்துல் வகாப் கலந்து கொண்டு பூமி பூஜைக்கான அடிக்கல் நாட்டு பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் பி. எம் சரவணன், துணை மேயர் கே ஆர் ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் , தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, மண்டல உதவி ஆணையர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
இந்த நவீன புதிய பஸ் நிறுத்தம் நெல்லை மாவட்டத்தில் சுற்றி இருக்கும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமையும் என்பதால் விரைவில் பணி முடிய வேண்டும் என்பது நெல்லை மக்களின் எதிர்பார்ப்பு.