தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தீவிர முழு ஊரடங்கை தொடர்ந்து ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 யூனியன்களிலும் தலா ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்த தகவல்களை பெறலாம். இந்த கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடு அறைகளின் தொடர்பு எண்கள்:
பாளையங்கோட்டை: 0462-2572092.
மானூர்: 0462-2485123.
அம்பாசமுத்திரம்: 04634-250397.
சேரன்மகாதேவி 04634-260131.
பாப்பாக்குடி 04634-274540,.
நாங்குநேரி 04635-250229.
களக்காடு 04635-265532.
வள்ளியூர் 04637-220242.
ராதாபுரம் 04637-254125.