தமிழகத்தை பசுமையாகும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் உயரமான மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி நெல்லை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, நேற்று முதல்கட்டமாக கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலய பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆல மரம், புங்கை மரம், வேங்கை மரம், கொடுக்காப்புளி மரம், நாவல் மரம் உள்ளிட்ட ஆயிரம் எண்ணிக்கையிலான உயரமான மரங்கள் நடப்பட்டது. மேலும் மீதமுள்ள 99 ஆயிரம் மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும் விரைவில் நட்டு வைக்கும் பணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவருடன், கூடுதல் முதன்மை, தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் திரு.யோகேஷ் சிங், வனப்பாதுகாவலர் திரு.செந்தில்குமார், மாவட்ட வன அலுவலர் திரு.கெளதம், வனச்சரக அலுவலர் திரு. கருப்பையா, நெல்லை தாசில்தார் திரு.பகவதி பெருமாள் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.