திருநெல்வேலி மாவட்டத்தில் பெருகி வரும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தடுப்பூசி தேவைப்படுபவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் உள்ள கிராம பகுதிகள், நகராட்சி பகுதிகள், மாநகர பகுதிகள் அனைத்திலும் சிறப்பு மருத்துவ குழு மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கிராமப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் 45 நடமாடும் பரிசோதனை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகள் தேடி வந்து பரிசோதனை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, விழிப்புணர்வுடன் இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.