கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 18 - 45 வயது நிரம்பியவர்களுக்கான தடுப்பூசி போடும் முகாம்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்களின் வழிகாட்டுதல்படி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாவட்டத்தில் உள்ள களக்காடு மற்றும் சேரன்மகாதேவி வட்டாரத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
களக்காடு பெரிய தெருவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.பிரியதர்ஷனி அறிவுரைப்படி, நடமாடும் மருத்துவ குழுவின் சார்பில், டாக்டர்.பீர்முகைதீன் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திறந்த வெளியில் வைத்து நடைபெற்றது.
இதேபோல சேரன்மகாதேவி நகர பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் காதர், டாக்டர் ஜேம்ஸ், கோவிட் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த தாசில்தார் பார்கவி தங்கம், மண்டல துணை தாசில்தார் மகாராஜன், சுகாதார ஆய்வாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.