திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் கார் பருவ சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, விவசாய பணிகளுக்கு தேவையான உரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தடையின்றி வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவசாய பணிகளுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டால், அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலர்களை செல்போனில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டார அலுவலர்களின் செல்போன் நம்பர்கள்:
அம்பாசமுத்திரம் - 9489477619.
சேரன்மகாதேவி - 9942982578.
முக்கூடல் - 9442025935.
மானூர் - 9442338354.
பாளையங்கோட்டை - 9444107556.
நாங்குநேரி - 9486271166.
களக்காடு - 9442151397.
வள்ளியூர் - 6374254317.
ராதாபுரம் - 9486652706.