வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றுத்தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக மாறியதால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, நம்பியாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளார்கள்.
நேற்று காலை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு:
பாபநாசம் - 83மிமீ
சேர்வலாறு - 47மிமீ
மணிமுத்தாறு - 12.04மிமீ
நம்பியாறு - 36மிமீ
கொடிமுடியாறு - 70மிமீ
அம்பாசமுத்திரம் - 17மிமீ
சேரன்மகாதேவி - 13மிமீ
நாங்குநேரி - 10மிமீ
களக்காடு - 17.2மிமீ
மூலக்கரைப்பட்டி - 20மிமீ
பாளையங்கோட்டை - 9மிமீ
திருநெல்வேலி - 7மிமீ.