நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த திரு. அன்பு அவர்கள், கடந்த வாரம் பணியிட மாறுதல் பெற்று சென்றுவிட்டதால், நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று 49 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பல்வேறு பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவின்படி நெல்லை மாநகர புதிய காவல்துறை ஆணையாளராக திரு.செந்தாமரைக்கண்ணன் ஐ.பி.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அமலாக்கப்பிரிவில் ஐ.ஜியாக பணியாற்றி வந்த திரு.செந்தாமரைக்கண்ணன் அவர்கள், தற்போது நெல்லை மாநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக பதவியேற்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.