செய்தி குறிப்புகள்:
- மே 27ஆம் தேதி நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
- நடைபெறும் இடம் - தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம்
வாழ்வில் ஒளி பிறக்கும் என நம்பிக்கையோடு வேலை தேடும் இளைஞர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய வகையில் வேலைவாய்ப்பு முகாம்..
மே - 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருநெல்வேலி கொக்கரகுளத்தி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தங்களுடைய கல்வி மற்றும் இதர சான்றுகளை கொண்டு வருவது அவசியம், என்று மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.
வேலை தேடுபவர்களும் வேலை வாய்ப்பளிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெரும் பதிவுதாரர்களின் அரசு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு “நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ்” என்னும் டெலிகிராம் சேனலில் கேட்டு தகவலை தெரிந்து கொள்ளலாம் என்றும் உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்தார்.
நல்ல பணி அமைந்து நலம் யாவும் பெற்று இளைய சமுதாயம் தங்கள் பணியில் மேலும் சிறப்பு பெற்று முன்னேற , திருநெல்வேலி டுடே வாழ்த்து தெரிவிக்கின்றது.