செய்தி குறிப்புகள்:
- களக்காடு நாடார் புதுதெரு முப்பிடாதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது
- சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வருஷாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தியதில் அவ்வூர்மக்கள் மகிழ்ச்சி
திருநெல்வேலி களக்காடு நாடார் புது தெரு முப்பிடாதி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா மிகசிறப்பாக நடைபெற்றது.
வாழ்க்கையில் தன்னை நாடிவரும் பக்தர்களை அன்போடு அரவணைப்பவள். துன்பத்தோடு ஓடிவரும் மக்களை துயர் தீர்த்து காப்பவள். தூய மனதோடு தம்மை நினைக்கும் அனைவருக்கும் குளிர்ச்சியான வாழ்வுதனை தருபவள் வேண்டும் வரமனைத்தும் கொடுத்து விரும்பிய வாழ்வுதனை அளிப்பவள் அவளுக்கு வருஷாபிஷேக விழா நடைபெற , மக்கள் பக்தி பெருக்கோடு அம்மனை சென்று தரிசனம் செய்தனர்.
சிறப்பு யாகசாலை அமைத்து முறையான மந்திரங்களுடன் பூஜைகள் நடத்தப்பட்டன .
தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பங்களுடன் 'ஓம் நமச்சிவாயா ' என்று கோஷமிட்டவாறு பதிகங்கள் பாடி சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்தனர்.
கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. வருஷாபிஷேக விழா ஐதீக முறைப்படி மிக சிறப்பாக நடைபெற்றது.
முப்பிடாதி அம்மன், சுடலை மாடன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது . மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.