நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் சிகிச்சையின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் தேவையான ஆக்சிஜனை பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயின்று, தற்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மருத்துவர்களாக பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பாக ஐம்பது லட்சம் மதிப்புடைய, ஐந்து லிட்டர் கொள்ளளவுள்ள ஐம்பது மற்றும் பத்து லிட்டர் கொள்ளளவுள்ள பத்து ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.