செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் செங்கலாங் குறிச்சி குளத்தின் மூலம் நானூறு ஏக்கர் விலை நிலங்கள் பாசன நீர் வசதி பெற்று வருகிறது
- அந்தக் குளத்தின் மறு காலை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே செங்கலாங்குறிச்சி குளம் உள்ளது . அதன் மூலமாக நானூறு ஏக்கர் விலை நிலங்கள் பாசனங்களுக்கான வசதி பெறும் வகையில் பொதுப்பணித்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குளத்தில் தேவையான அளவு பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றது. குளத்தின் மறுகாலுடைய சுவர்கள் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து இடிந்து விழுந்து உள்ளது . இதனை சீர்படுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
குளத்தில் ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டுள்ளது . இப்பொழுது குளத்தில் நீர்மட்டமும் அதிக அளவில் இல்லை. மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் விரிசல்கள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அந்தக் குளம் உடைந்தால் சுற்றியுள்ள செட்டி மேடு பகுதிகள் , காந்திநகர் பகுதி கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. அதனால் குளத்தின் மறுகாலை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
Image source: dailythanthi.com