திருநெல்வேலியில் உள்ள அரசு அருங்காட்சியகம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று இலவச கலை பயிற்சி வகுப்புகளை என்.பி.என்.கே கலை பண்பாட்டு மையத்துடன் இணைந்து இணையதளம் மூலம் நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் வீட்டில் இருந்தபடியே பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று பயன் பெறலாம்.
இந்த வாரம் வியாழக்கிழமையான இன்று மாலை 3.00 மணிக்கு “இலையில் ஓவியம் செய்யும் கலை பயிற்சி” வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விருப்பம் உள்ள அனைத்து தரப்பினரும், ஜூம் செயலி எண்: 8740995990 , கடவுச்சொல்: 333543 ஆகியவற்றை பயன்படுத்தி இணையதள பக்கத்தில் இணைந்து கலந்து கொள்ளலாம். இது பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள 9444973246 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அரசு அருங்காட்சியகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது