- நெல்லையில் மாணவர்களுக்கான நீட் தேர்வு 11 மையங்களில் நாளை முதல் நடைபெறவிருக்கிறது
- தென்காசி மாவட்டத்தில் ஒரு மையத்தில் இடைத்தேர்வு நடைபெறுகிறது.
தேசிய அளவில், பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் நேஷனல் எளிஜிபிலிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் (National Eligibility Entrance Test ) என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 2013 மே 5ம் தேதி முதல் வருடந்தோறும் நடத்தப்படுகிறது. . கடந்த 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகாம் நடத்தி வருகிறது
மருத்துவம் மற்றும் பல மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு வரும் தேசிய தேர்வு முகமையால் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது
நெல்லையில் இந்த வருடத்திற்கான நீட் தேர்வு 11 மையங்களில் நாளை நடைபெறவிருக்கிறது .தென்காசி மாவட்டத்தில் ஒரு மையத்தில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வுக்கான நேரம்; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முதல் மாலை 5:20 மணி வரை.
திருநெல்வேலி மாவட்டத்தில் விஜய நாராயணம் கேந்திரிய வித்யாலயா
ஐ.என்.எஸ் வண்ணாரப்பேட்டை,, பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, வடக்கன்குளம் எஸ் ஏ வி பாலகிருஷ்ணாமேல்நிலைப்பள்ளி, தியாகராஜ நகர் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி , சீதபட்ப நல்லூர் ஐன்ஸ்டீஸ் கலை அறிவியல் கல்லூரி , தாழையூத்து மகாராஜா நகர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் நீட் தேர்வு நடைபெறுகின்றது
அதனோடு சேரன்மகாதேவி ஸ்கார்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி , தியாகராஜ நகர் புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாழையூத்து ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மேட்ரிக் மேல்நிலைப்பள்ளி , பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, திசையன்விலைஇன்டர்நேஷனல் பள்ளி என ஆகிய மொத்தம் 11 மையங்களில் நடைபெற இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோயில் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கான நீட் தேர்வு இந்த மையத்திலும் நடைபெறுகிறது.
Image source: instanews