செய்திக் குறிப்புகள்
- திருநெல்வேலி மாவட்டம் வீர தீர செயல்கள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது
- ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் வீரதீர செயல்களுக்காக சுதந்திர தின விழாவின்போதும் முதல்வர்கள் வழங்குவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டும்..
நெல்லை மாவட்டம் கலெக்டர் விஷ்ணு செய்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு.
தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விரிவான சுயவிவர குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் இணைய தளம் வாயிலாக இம்மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
தகுதியுடைய பெண்கள் தங்களுடைய முழுமையான சுயவிவர குறிப்புகள் அடங்கிய படிவத்தை மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்ட சமூக நல அலுவலகம் பி4/ 107 சுப்பிரமணியபுரம் தெரு வ.உ. சி மைதானம் எதிரில் திருவனந்தபுரம் சாலை பாளையங்கோட்டை திருநெல்வேலி 62 7002 என்ற முகவரிக்கு நேரிடையாக வந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு மேலும் அறிவித்துள்ளார்.
நல்ல திறமையுடைய வீர தீரம் உடைய பெண்கள் எங்கோ மூலையில் ஒளிந்து கிடக்காமல், இப்படிப்பட்ட அரசு கொடுக்கக்கூடிய சலுகைகளை பயன்படுத்தி தமது திறமைகளை வெளிக்கொணர்ந்து சாதனை படைக்க முன்வரவேண்டும் என்று திருநெல்வேலி டுடே தம்முடைய கருத்தை வெளியிடுகின்றது.
Image source: Maalaimalar