செய்திக் குறிப்புகள்
- நெல்லை தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
- விண்ணப்பங்களை வருகிற 20-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
படிப்பு ஆர்வம் குறை என்பது யாரும் இலாது, ஏதாவது ஒரு தொழில் அனுபவம் கற்று இளைஞர்கள் முன்னேற வேண்டுமென்று அரசு பல்வேறு திட்டங்களை வெளியிடுகின்றது. அதனை மையப் படுத்தும் விதமாக , நெல்லை மாவட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஐ.டி.ஐ அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022 ஆண்டிற்கான தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
10ஆம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ தொழில் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் , மொழி பாடங்கள் ஆங்கிலம் தமிழ் மட்டும் எழுதி பிளஸ் டூ சான்றிதழ் க்கான அங்கீகாரம் பெறலாம்.
இதேபோல் 8 ஆம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ தொழில் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ், ஆங்கிலம் எழுதி எஸ்எஸ்எல்சி சான்றிதழ் க்கான அங்கீகாரம் பெறலாம்.
மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வருகிற 20-ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பேட்டை, ராதாபுரம், அம்பை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடத்திலும், ஐ.டி. ஐ மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் ஆகியவற்றை அணுகி விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி இலவசமாக மடிக்கணினி, இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடைகள் ஒரு ஜோடி செருப்பு , வரைபட கருவிகள் .. இது தவிர மாணவர்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பஸ் பாஸ் மற்றும் சிறப்பு சலுகை கட்டணத்தில் ரயில் பாஸ் வழங்கப்படும். 750 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்தார்.
பேட்டை அரசு ஐ.டி. ஐ செப்டம்பர் மாதம் 24, 25 தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வும் நடைபெற உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் . அதற்கான தகுதிகள்..
வயரிங் வேலை ஐந்து வருட செய்முறை ஆர்வம் உள்ளவர் மற்றும்
விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவர்கள் ஆகவும் அவசியம் இருத்தல் வேண்டும். ஜூலை மாதம் 26ம் தேதிக்குள் பேட்டை அரசு ஐ.டி.ஐ க்கு விருப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (www.skilltraining.tn.gov.in)
Image source: Puthiyathalaimurai