- தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவத்திருப்பதிகள்.
- திருவைகுண்டம் தொடங்கி திருத்தொலைவில்லிமங்கலம் வரை.
திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை என்னும் இடத்தில் கடலில் சங்கமிக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது வைணவ திருக்கோவில்கள் "நவத்திருப்பதிகள்" என்று சிறப்பிக்கப்படுகின்றன.
நவதிருப்பதி ஸ்தலங்கள்:
1. திருவைகுண்டம் கள்ளர்பிரான் திருக்கோவில்.
2. நத்தம் (வரகுணமங்கை) விஜயாசன பெருமாள் திருக்கோவில்.
3. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்.
4. திருப்புளிங்குடி காய்சினிவேந்த பெருமாள் திருக்கோவில்.
5. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் திருக்கோவில்.
6. தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில்.
7. பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் திருக்கோவில்.
8. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-1) தேவர்பிரான் திருக்கோவில்.
9. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-2) அரவிந்தலோசனர் திருக்கோவில்.
இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பதனால் பெருமாளின் பரிபூரண அருள் கிட்டும் என்பது நம்பிக்கை.
Image source: Facebook.com