திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ளது வானமாமலை பெருமாள் திருக்கோவில். வைணவ திவ்ய தேச ஸ்தலங்கள் நூற்றியெட்டினுள் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில் வருடம்தோறும் தை அமாவாசை அன்று ஒரு கோட்டை எண்ணெய்க்காப்பு விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நாளை (01/02/2022) நடைபெற உள்ள தை அமாவாசை விழா நிகழ்ச்சிகள்:
காலை - 7.00: திருமஞ்சனக்கும்பம் மாட வீதி உலா.
காலை - 8.15: விஸ்வரூப தரிசனம்.
காலை - 8.45: ஒரு கோட்டை எண்ணெய்க்காப்பு.
காலை - 11.00: சங்காபிஷேகம்.
பகல் - 12.00: திருமஞ்சனம், கும்பாபிஷேகம்.
பகல் - 1.30: சாற்றுமுறை - தீர்த்த விநியோக கோஷ்டி.
இரவு - 7.00: சந்தனக்காப்பு.
இரவு - 10.00: பத்ர தீப புறப்பாடு - ஸ்ரீபலி மண்டபம் எழுந்தருளல்.
இரவு - 12.00: தெய்வநாயகர் - கருட வாகனம், தாயார் - அன்ன வாகனம், ஆண்டாள் - கிளி வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி திருவீதிகளில் உலா.