- திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை.
- வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாதமாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் இருந்து வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகலுக்கு மேல் மேகம் கருத்து, இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்தது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பாபநாசம், விக்கரமசிங்கபுரம், சிவந்திபுரம், அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளிலும், மாநகரில் பேட்டை, திருநெல்வேலி டவுண், நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கன்னடியன் கால்வாய் பகுதியில் 12.6 மி.மீட்டரும், அம்பையில் 12 மி.மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.6 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
Image source: Facebook.com