- நெல்லையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்கள் சேர்ந்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மின் வாரிய மண்டல அலுவலகம் முன்பு போராட்டம்.
- ஊதிய உயர்வு மற்றும் 52000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி போராட்டம்
மக்கள் தங்கள் குறைகளை சொல்வதற்கு போராட்டம் ஒன்றே தீர்வு எனும் நிலைதான் அன்றைய சுதந்திர காலத்தில் இருந்து இன்றைய நிலைமை வரை தொடரத்தான் செய்கின்றது.
நெல்லை மாவட்டத்தில் மின் வாரிய மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டல செயலாளர் பீர் முகமது ஷா தலைமை ஏற்றார். பொதுச்செயலாளர் சாலமோன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் .
பஞ்சப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் பாரிய ஆணையை ரத்துசெய்ய வேண்டும் .2-12-2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.
மேலும் 3% பஞ்சபடியை உடனடியாக வழங்கிட வேண்டும் . மின் வாரியத்தில் காலியாக உள்ள 52000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை முழங்கினர்.
கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் குழுக்கள் சேர்ந்து நடத்தும் நியாயமான இந்த தற்போதைய போராட்டங்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.