செய்தி குறிப்புகள்:
- நெல்லையில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் மே 26 ல் நடைபெற உள்ளது
- மீனவர் கோரிக்கை மனுவை ஏற்றுக் கொள்கிறார் மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள வளர்ச்சி அலுவலகத்தில் மே 26 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் மீனவர் குறைதீர் கூட்ட அரங்கம் நடைபெற இருக்கிறது.
கடல் பயணத்தில் உயிரை பணயம் வைத்து வாழ்வாதாரத்திற்காக தங்கள் பணியை செவ்வனே செய்யும் மீனவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அங்கு சென்று நேரில் கொடுக்கலாம். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசு துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகளையும் அந்த கூட்ட அரங்கில் மனுவாக எழுதிக் கொடுக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
நிச்சயமாக தங்கள் குறைகளுக்காக கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று மீனவர்கள் நம்பிக்கை வைப்பது உண்மையாகட்டும்.