தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற உலகம்மை உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் மாசி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று காலை 5.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில் தினமும் இரவில் காசி விஸ்வநாதர், உலகம்மை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், வரும் 16/02/2022 அன்று மாசி தேரோட்டமும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.