- அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து துவங்க உள்ள மாரத்தான் போட்டி.
- வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், நள்சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
திருநெல்வேலியில் வருகிற 15/03/2022 அன்று மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் மார்ச்-15 அன்று ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என தனித்தனியாக பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து காலை 7.00 மணிக்கு துவங்க உள்ள மாரத்தான் போட்டியில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெறலாம் எனவும், போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் பிரிவில் முதல் மூன்று நபர்களுக்கும், பெண்கள் பிரிவில் முதல் மூன்று நபர்களுக்கும் பரிசுகளும், நற்சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்ணா விளையாட்டு அரங்கில் துவங்கும் இந்த போட்டியானது அரசு மருத்துவமனை சாலை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சாலை, சீனிவாச நகர் புறவழிச்சாலை பாலம் வரை சென்று மீண்டும் அதே வழியாக திரும்பி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image source: racemart.in