கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மாசி கொடை விழா வரும் 27/02/2022 அன்று துவங்கி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த விழாவின் முதல் நாளான 27/02/2022 அன்று காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கொடியேற்றமும், ஆறாம் திருநாளான 04/03/2022 அன்று நள்ளிரவில் வலியபடுக்கை பூஜையும், ஒன்பதாம் திருநாளான அன்று இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பெரிய சக்கர தீவெட்டி உடன் பவனி வருதலும், பத்தாம் திருநாளான 08/03/2022 அன்று அதிகாலை 2.00 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி வருதலும், அதிகாலை 3.30 மணிக்கு அம்மன் பவனி வருதலும், அதிகாலை 4.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அடியந்திர பூஜையும், இரவு 12.00 மணிக்கு ஒடுக்கு பூஜையும், அதனை தொடர்ந்து கொடி இறக்குதல் ஆகியவையும் நடைபெற உள்ளது. மாசிக்கொடை விழா தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகிறார்கள். இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை இப்போதே களைக்கட்ட தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Image Source: nagercoilinfo.com