Logo of Tirunelveli Today

மக்களின் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றம்

June 9, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்தி குறிப்புகள் :

  • நெல்லை மாவட்டம் புதன்கிழமை தோறும் நடக்கும் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றம்.
  • முகூர்த்தம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாய் செவ்வாய் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பி எம் சரவணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்கள் தங்களின் குறைகளை தீர்க்கக் கோரி மனு கொடுக்க, அதை ஏற்றுக்கொண்டு பரிசீலித்து பல சலுகைகள் அரசாங்கம் இன்று வரை செவ்வனே செய்து வருகிறது.

இதில் முக்கியமாக வாரம்தோறும் புதன்கிழமை என ஒருநாள் அமைத்து, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அதில் நடைபெற்று, மக்களும் தங்களுடைய குறை தீர்வதற்கான மனுக்களை
அளித்து வந்தனர்.

அதுபோல் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. ஏவிஎம் சரவணன் தலைமை தாங்கி , பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி நகர்நல அலுவலர் ராஜேந்திரன் , உதவி ஆணையாளர்கள் ஐயப்பன் ,ஜஹாங்கீர் பாட்சா , லெனின் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் பி எம் சரவணன் பேசியதாவது ‌‌

புதன்கிழமை முகூர்த்தம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் காரணமாக குறை தீர்க்கும் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை அன்று மாற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை ஏற்று அடுத்த வாரம் முதல் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மேயர் பி எம் சரவணன் கூறினார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify