திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹைகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் மருத்துவ தேவைகளை கவனத்தில் கொண்டு தினமும் 14 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு சென்னைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி - ஹைகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 8 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன், டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு, மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சேமிப்பு டேங்கில் நிரப்பப்பட்டது.