தமிழகத்தில் வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள் தலைமை தாங்கி, மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் வாக்குப்பெட்டி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் ஆகியோருக்கு தேர்தல் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.