விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சிவகாசியில் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், சிவகாசி மாநகராட்சியில் ரமேஷ், ராமச்சந்திரன், சுருளிநாதன், கார்த்திகேயன், அழகேஸ்வரி ஆகிய 5 பேர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 10 வது வார்டுகளை சேர்ந்தவர்கள் அதிகாரி ரமேஷிடமும், 11 முதல் 20 வது வார்டுகளை சேர்ந்தவர்கள் அதிகாரி ராமச்சந்திரனிடமும், 21 முதல் 30 வது வார்டுகளை சேர்ந்தவர் அதிகாரி சுருளிநாதனிடமும், 31 முதல் 39 வது வார்டுகளை சேர்ந்தவர்கள் அதிகாரி கார்த்திகேயனிடமும், 40 முதல் 48 வது வார்டுகளை சேர்ந்தவர்கள் அதிகாரி அழகேஸ்வரியிடமும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.