தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவி பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு, கோபால சுந்தர ராஜ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குற்றாலம் அருவில் குளிக்க அனுமதி கிடைப்பது எப்போது? என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அதுபற்றி இன்னும் எந்தவிதமான அறிவிப்புகளும் தமிழக அரசு சார்பாக வெளியிடப்படவில்லை என தெரிவித்தார்.]