செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் இரண்டு அணு உலைகள் அமைக்கப்படுவதில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரம்.
- உலகில் முழு உற்பத்தி திறனாக ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கை எட்டி பிடிப்போம் மின் நிலைய வட்டாரம் அறிவிப்பு.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளின் உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
3 மற்றும் 4- வது அணு உலைகள் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந் நிலையில் அவற்றில் அடுத்த ஆண்டு மின் உற்பத்தி தொடங்கும் விதமாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் 5 மற்றும் 6 வந்து அணு உலைகள் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி இரண்டாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தியை சீரமைப்பு பணியில் அணு உலையில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் முழுவீச்சில் மேற்கொண்டனர் .
இப்பணிகள் நிறைவு பெற்று இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததால் நேற்று காலை 11:35 மணிக்கு இரண்டாவது அணுஉலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
அங்கு தற்போது 270 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில் படிப்படியாக மின் உற்பத்தி அளவு அதிகரிக்கப்படும். பின்னர் அந்த உலகில் முழு உற்பத்தி திறனாக ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கை இன்னும் ஓரிரு நாட்களில் அடையும் என மின் நிலைய வட்டாரம் தெரிவித்து இருப்பது இந்திய மின்உற்பத்தி பங்கின் மிக பெரிய சாதனையாகத்தான் அமைந்துள்ளது.
Image source: dailythanthi.com