திருநெல்வேலி அம்பை ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணசுவாமி கோவிலில் கடந்த 3ஆம் தேதி வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
தொடர்ந்து சுவாமி அம்பாள் அனுமன் வாகனம், சேஷ வாகனம் போன்ற வாகனங்களில் ஒவ்வொரு நாளும் எழுந்தருளிய அழகிய தரிசனத்தை பல பகுதியிலிருந்து வந்த மக்கள் பக்தியோடு கண்டுகளித்தனர்.
ஐந்தாம் நாளன்று கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மி நாராயண பெருமாள்,
தென் அழகர் ,அழகர் சுவாமி ,புருஷோத்தம பெருமாள், நவநீத கிருஷ்ண சாமி ,ஆகிய ஐந்து சுவாமிகளுகம் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி ஐந்து கருட சேவை நிகழ்ச்சிகள் என பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர் .
அந்தப் பெருமானின் அழகிய தரிசனம் தெய்வீக தரிசனமாக, சிந்தை குளிரும் தரிசனமாக ,தெவிட்டாத தரிசனமாக, செல்வகடாட்சத்தை வாரி வழங்கும் தரிசனமாக மக்களுக்கு தரிசனம் கொடுக்க… மக்கள் இரு கைகளையும் கூப்பி பக்தி பரவசத்தோடு கோவிந்தா என கோஷமிட்டு மெய்மறந்து தரிசனம் செய்தனர்.
யானை வாகனம் குதிரை வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள், வைகாசி விசாகத்தன்று தீர்த்தவாரி அபிஷேகங்கள் ,இரவில் சுவாமி அம்பாள் வீதி உலா என நடைபெறவிருக்கும் இந்தத் திருவிழாவிற்கு வரும் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் வகையில் கோவில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடும் செய்துள்ளது.
.