தூத்துக்குடி மாவட்டம்., கோவில்பட்டியில் உள்ளது பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் வரும் அன்று வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்று காலை 6.30 மணிக்கு மேல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்று மஹா பூர்ணாஹுதியுடன் கூடிய தீபாராதனையும், அதனை தொடர்ந்து காலை 10.00 மணிக்கு மேல் கோவில் விமானங்களுக்கு புனித கலச நீரினால் அபிஷேகங்களும், பகல் 11.30 மணிக்கு மேல் திருக்கோவில் மூலவர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு 8.00 மணிக்கு மேல் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் கூடிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.