- நெல்லை மாவட்டம் கொக்கர குளத்தில் மூலிகைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை ஜூலை 16ஆம் தேதி நடைபெறுகிறது
இயற்கையாகக் கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட செடிகளைக் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் முறைதான் மூலிகை மருத்துவம் என்கிறோம். மனிதர்களுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய இந்த மூலிகை மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது இதனை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட அறிவியல் மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு;
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் உலகத் தமிழ் மருத்துவ கழகம் ஆகியவை இணைந்து மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்துகின்றது.
ஒவ்வொரு மாதமும் முதல் 3வது சனிக்கிழமைகளில் மாலை நாலரை மணிக்கு நடைபெற இருக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில், மஞ்சள் கரிசாலை மூலிகை பற்றிய கருத்து ஆய்வுகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்படுகிறது .
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பயன் தரும் வகையில் இலவசமாக மூலிகை கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9442994797 என்ற கைப்பேசி எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும் என செய்தி குறிப்பில் மாவட்ட அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
“உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடுதனை அனைவரும் உணரும் வகையில் நடக்கின்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வு நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.