திருநெல்வேலி நெல்லை கொக்கரகுளம் முத்தாரம்மன் சமேத குருசாமி கோவிலில் முத்தாரம்மனுக்கு 1008 லட்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இந்த தரிசன காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
கடந்த 7ஆம் தேதி கொக்கரகுளம் முத்தாரம்மன் சமேத குருசாமி கோவிலில் முளைப்பாரி திருவிழா கோலாகலமாய் தொடங்கியது. மாலையில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு காண்பதற்கு கோவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அன்று மாலை முளைப்பாரி எடுக்கும் விரத பக்தர்கள் கும்மி அடிக்கும் நிகழ்ச்சியும் ,அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முளைப்பாரி விழா சிறப்பாக நடந்தேறியது. காலை 9 மணிக்கு அம்பாளுக்கு மிக அழகாய் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பெண்கள் முளைப்பாரியுடன் ஊர் சுற்றி வந்தனர். இரவு ஏழு மணிக்கு அம்பாளுக்கு 1008 லட்டு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள். ,அம்பாளின் சப்பர வீதி உலா அனைத்தும் மிக சிறப்பாக நடைபெற்றது .
இந்த நிகழ்வில் தென்மண்டல கட்டளை ஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், தருமை ஆதீனம், நிர்வாகிகள் சிவ. மகாலிங்கம் லக்ஷ்மணன் மற்றும் விழா குழுவினர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவின் சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Image source: dailythanthi.com