திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் 12 வது வார்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள, காரையாறு அணை பகுதிக்கு மேலுள்ள இஞ்சிகுழி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களில் 20 பேருக்கு ஓட்டுரிமை உள்ள நிலையில், இவர்களுக்குரிய வாக்குச்சாவடி காரையாறில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய, வாக்கு பதிவுக்கு முன்தினம் காலையிலே தங்களது ஊரில் இருந்து புறப்பட்ட மலைவாழ் மக்கள், 12 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் நடந்தும், பின்னர் 8 கிலோ மீட்டர் தூரம் அணையில் படகில் பயணித்தும் இரவில் காரையாறு வந்து சேர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் தங்கள் வாக்குகளை உற்சாகமாக பதிவு செய்தனர்.
Image source: dailythanthi.com