திருநெல்வேலி மாவட்டம்., களக்காட்டில் உள்ளது பிரசித்தி பெற்ற கோமதி அம்மை உடனுறை சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில். இங்கு வருடம் தோறும் தைப்பொங்கல் முடிந்து கணுத்திருநாள் பூஜை சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கணுத்திருநாள் பூஜையை ஒட்டி நேற்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.