கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் தங்கள் வசம் வைத்துள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அதிகாரியிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அரவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் துப்பாக்கிகளை ஒப்படைக்காமல், பதுக்கி வைத்திருக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது படைக்கலச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்படும் துப்பாக்கிகள், தேர்தல் பணிகள் முடிவுற்ற பின்னர் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.