குன்றத்தூர் சென்னை குன்றத்தூர் கல்யாண காத்யாயினி அம்மன் கோவில், திருமணம் வெகு நாட்களாக ஆகாது வருந்துவோர் அனைவருக்கும் மண வாழ்க்கை உடனே அமைந்து திருமணம் கைகூடும் அருமையான ஸ்தலமாகும்
அதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்;
குன்றத்தூர் கல்யாண காத்யாயினி அம்மனை நன்றாக வேண்டி கொள்ளுங்கள். வாழ்க்கையில் மங்களகரமான காரியத்திற்கு நாம் தேங்காயை பயன்படுத்துவோம். இந்த மங்கள காரியத்திற்கும் மிகவும் முக்கியமானது தேங்காய். மஞ்சள் பூசிய தேங்காய் எடுத்துக்கொள்ளவும். விரலி மஞ்சள் கட்டிய தாலி கயிற்றை குடுமியில் சுற்றவும். சந்தனம் குங்குமம் மூன்று இடங்களில் வைத்து சிவப்பு பொட்டு இடவும்.
மஞ்சள் நிற மலர்ச்சரம் மல்லிகை சரம் என ஒரு வெள்ளி அல்லது பித்தளை தட்டில் வையுங்கள் . மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். இஷ்ட தெய்வம் குலதெய்வங்களை நினைத்து 48 நாட்கள் பூஜை அறையில் விளக்கேற்றி தினமும் பூஜை செய்து வந்தால் நல்ல இடத்தில் திருமணம் உறுதியாகும்.
நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் காத்யாயினி அம்மன் கோவிலுக்கு மணி தட்டு, மஞ்சள் ஆரத்தி கலச சொம்பு என பூஜை பொருட்களை நம் விருப்பப்படி வாங்கித் தரலாம் . முகூர்த்த தேங்காயை உடையாமல் பத்திரமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள கோவில் குளத்து தீர்த்தத்தில் விட வேண்டும் .
வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் சென்னை குன்றத்தூர் கல்யாண காத்யாயினி அம்மன் கோவிலில் மஞ்சள் தேங்காய் பூஜை செய்யும் விவரங்கள் கேட்டறிந்து அதன்படி முறையாக வழிபாடு செய்தால், எவ்வித தோஷங்கள் இருந்தாலும் நீங்கி திருமணம் விரைவாக நடந்தேறும் .
பதினாறு செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு குன்றத்தூர் காத்யாயினி அம்மன் திருத்தலத்திற்கு சென்று வாருங்கள். வாழ்வினை அனைத்து வளங்களும் பெற்று சிறப்பை காணுங்கள்.
இந்த வார விரத தினங்கள்
21- 7- 2022 வியாழன்கிழமை முதல் 28-7- 2022 வியாழன்கிழமை வரை
23-7- 2022 சனிக்கிழமை - ஆடி கிருத்திகை
26-7-2022 செவ்வாய்க்கிழமை- பிரதோஷம்,மாத சிவராத்திரி
28- 7- 2022 வியாழக்கிழமை- ஆடி அமாவாசை
ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்பான மாதம். இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் அபிஷேகம் ஆராதனை என்று சிறப்பான மாதமாக மேள தாளத்துடன் நம்முடைய காதுகளுக்கு பக்தி கலந்த சப்தநாதங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் அருமையான மாதம் ஆகும்.
அதுபோலவே இந்த மாதத்தில் இந்த வாரம் வரக்கூடிய ஆடி கிருத்திகை, பிரதோஷம் ,மாத சிவராத்திரி, ஆடி அமாவாசை அனைத்தும் தெய்வத்தின் மேல் பக்தியோடு வணங்கி விரதம் இருந்து தெய்வத்தின் அருளை பெறக்கூடிய நாட்கள் என்பதால் அனைவரும் முன்கூட்டியே இந்த சுப நாட்களை அறிந்து வழிபடும் முறைகளை அறிந்து , அதன்படி வழிபட்டு தெய்வத்தின் அருள் பெற்று வாழ்கையில் வளம் காணுங்கள்.
இந்த விரதத்தின் முறையான வழிபடும் முறைகளைப் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் நிறைய பார்க்கவிருக்கின்றோம்.