Logo of Tirunelveli Today

கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடைய பெண்கள் விண்ணப்பம் செய்யலாம்!

June 22, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஓவ்வொரு ஆண்டும்  வீர, தீரச்செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களை பாராட்டும் வகையில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி 2021ம் ஆண்டிற்கான வீர, தீரச் செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின்  புகைப்படம், அவர்கள் சம்மந்தப்பட்ட பத்திரிக்கைச் செய்தி, சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் செய்த வீர, தீர சாதனைகள் பற்றிய விவரங்கள்  ஆகியவற்றை 3 ஸ்பைரல் பைண்டிங் நகல்களாக தயார் செய்து, பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கம் திருநேல்வேலி என்ற முகவரிக்கு நேரில் சென்றோ, தபாலிலோ 24.06.2021 அன்று  மாலை 5.00 மணிக்கு முன்னதாக  விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ராஜேஷ் அவர்கள் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் இது பற்றிய தகவலை அறிந்து கொள்ள 0462-2572632 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்
1 2 3 21

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify