- நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
- மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்துகொண்டு விதை வங்கியை தொடங்கி வைப்பு.
'நம்பிக்கை எனும் விதை விதைத்தால் தான் வாழ்க்கை விருட்சம் பெறும்' 'ஆடிப்பட்டம் தேடி விதை' எனும் கருத்துகளை நினைவு கூறும் வகையில்.. உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி விதை வங்கி துவக்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி அருகே உள்ள முன்னீர்பள்ளம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். வளர்ப்புக்கு ஆதாரமான விதை வங்கியை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுடன் சிறப்புரையாற்றினார்.
நீரை சேமிப்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் , மரங்களை வளர்ப்போம் போன்ற முழக்கத்தோடு மாணவர்களின் பேரணி என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் முத்தமிழ் பப்ளிக் பள்ளியின் தலைவர் அமரவேல் பாபு, தாளாளர் ஜெயந்தி பாபு , ஏ ட்ரீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், நேச்சர் கிளப் செயலர் ஹரி பிரதான் , பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.