கடையம் முப்பிடாதி அம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில்களில் தை மாத கடை செவ்வாயை முன்னிட்டு நேற்று கொடை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நேற்று காலை பக்தர்களின் பால்குடம் உலா வரும் வைபவமும், தொடர்ந்து பகலில் சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனையும், மாலையில் பொங்கலிடும் வைபவமும், தொடர்ந்து இரவில் ஜாமக்கொடை விழாவும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நள்ளிரவில் முப்பிடாதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரிலும், பத்ரகாளியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலும் எழுந்தருள இரண்டு அம்மன்களும் எதிர் எதிராக சந்திக்கும் வைபவமும், அதனை தொடர்ந்து தேரோட்டம் மற்றும் சப்பர வீதி உலாவும் நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் திரளாக பங்குபெற்று சுவாமி தரிசனம் செய்தனர்.