- நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கபடி போட்டி நடைபெற்றது.சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை மாவட்ட ஊராட்சி தலைவர் வி. எஸ். ஆர். ஜெகதீஷ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்ற அகில இந்திய அளவில் மின்னொளி கபடி போட்டியில் சென்னை வருமான வரி துறை அணி வெற்றி பெற்றது .
திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டி நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போட்டி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை ஆண்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் சென்னை வருமான வரி துறை அணியும் ஹரியானா அணியும் மோதினர். இந்த கபடி போட்டியில் வருமான வரி துறை அணி வெற்றிபெற்று முதல் பரிசு இரண்டு லட்ச ரூபாய் மற்றும் கோப்பையை கைப்பற்றியது. ஹரியானா அணி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோட்டை கோப்பையை வென்றது .
பெண்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது . ஹரியானா அணியும் ஹைதராபாத் தெற்கு வாக்கிய ரயில்வே அணியும் பங்கேற்றன . ஹைதராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி வெற்றி பெற்று ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை கைப்பற்றியது அரியானா அணி ஒரு லட்சம் ரூபாய் மற்றும் கோப்பையை வென்றது .
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை மாவட்ட ஊராட்சி தலைவர் வி. எஸ். ஆர். ஜெகதீஷ் அவர்களால் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
Image source: maalaimalar.com