செய்தி சுருக்கம் :
- நெல்லை கடையம் பகுதியில் சனிக்கிழமை ஜூன் 18 ஆம் தேதி தமிழக ஆளுநர் சுற்றுப் பயணம்
- பாதுகாப்பு கருதி அதிகாரிகள் வியாழக்கிழமை அன்று ஆளுநர் செல்லும் இடங்களில் ஆய்வு
ஒரு பணி செவ்வனே நடக்க வேண்டும் எனில் அதற்கான முன்னேற்பாடுகள் மிகவும் அவசியம் என்பதை மையப்படுத்தும் வகையில்…
கடையம் பகுதியில் சனிக்கிழமை ஜூன் 18 தமிழக ஆளுநர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதனையொட்டி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆளுநர் செல்லும் இடங்களை ஆய்வு செய்தனர் .
கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தப்பேரியில் வசித்து வரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீதரின் இல்லத்திற்கு தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி சனிக்கிழமை வர உள்ளார் . மேலும் அருகே உள்ள ராஜாங்கபுரம் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.
அதற்கான முன்னேற்பாடாக ஆளுநர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கும் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணி மற்றும் சுகாதார பணிகளை தென்காசி கோட்டாட்சியர், வட்டாட்சியர் அருணாச்சலம் , ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகைய்யா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
ஆய்வின்போது ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி தலைவர்கள் கோவிந்தப்பேரி, டி.கே பாண்டியன் , காவல்துறை தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் , காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், தலைமை காவலர் ரவி , மந்தியூர் கல்யாணசுந்தரம், , கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருமலைக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.