- திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள்.
- 15/03/2022 அன்று தூய்மை பணியாளர் தேசிய ஆணையக்குழு தலைவர் ஆய்வு.
திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வரும் 15/03/2022 அன்று புதுடெல்லி தூய்மை பணியாளர் தேசிய ஆணையக்குழுவின் தலைவர் திரு.வெங்கடேசன் அவர்கள் திருநெல்வேலிக்கு வருகிறார்.
அன்று காலை 10.00 மணிக்கு அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கும் திரு. வெங்கடேசன் அவர்கள் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாலை 3.00 மணிக்கு நடைபெற உள்ள குறைகேட்பு கூட்டத்திலும் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர் நலச்சங்க பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு இவர்களது கோரிக்கை மற்றும் கருத்துக்களை வழங்கலாம் என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image source: Facebook.com