- திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 30, 31 தேதிகளில் குறுகிய கால கல்வெட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
- திருநெல்வேலி வட்டார மக்களுக்கு தொல்லியல் சார்ந்த ஆர்வத்தினை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படுவதாக அருங்காட்சி காப்பாட்சியர் அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் மக்களுக்கு பழங்கால தொல்பொருள் சின்னங்கள் மறக்காமல் தொடர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக எடுத்து வருகின்றது. இதனை மையப்படுத்தும் விதமாக
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சார்ந்த ஆர்வத்தினை மேம்படுத்தும் வகையில் கல்வெட்டினை வாசிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்த பயிற்சி நடக்கின்றது. குறுகிய கால தொடர்பான பழங்கால எழுத்துக்கள் குறித்த கற்றல் பயிற்சியும் சேர்த்து அளிப்பதற்கு நேரடியாக பயிற்சி கொடுக்கப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 30 சனிக்கிழமை மற்றும் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு முழு நேரமாக நடத்தப்பட உள்ளதால் கல்லூரி மாணவ மாணவியர் , வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள் , பொதுமக்கள் என விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்
பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளவர்கள் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள் என அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவாணி குறிப்பிட்டுள்ளார்.
பங்கேற்க விருப்பம் இருந்தால் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வதற்கு திருநெல்வேலி eஅரசு அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது 7502433751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .
மிகவும் தொல்பொருள் நுணுக்கமான இந்த அறிவுக் கலையை அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்று கற்றுக்கொள்ள முன் வர வேண்டும். கற்று நம்முடைய பழங்கால சிறப்புகள் மேலும் வளம் பெற்று நம் நாட்டிற்கு சிறப்பை தேடி தர வேண்டும் என திருநெல்வேலி டுடே சார்பாக மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றது.