செய்திக்குறிப்புகள்:
ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர்.
இங்கு கடல் அலையின் ஓசை கூட ஓம் என்று ஒலிக்கிறது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பிக்கப்படும் ஆறு திருக்கோவில்களுள் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு தான் முருகப்பெருமான் சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களோடு போரிட்டு அவர்களை சம்ஹாரம் செய்தருளினார் என்பது வரலாறு.
பல்வேறு சிறப்பம்சங்களும், அதிசயங்களும் நிறைந்திருக்கும் இந்த கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரம் அருகே மூலவருக்கு நேர் எதிராக சுவற்றில் ஒரு சதுர வடிவ துளை இருக்கிறது. இந்த துளையில் நம் காதுகளை வைத்து கேட்டால், எழும்பி ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் ஓசை கூட "ஓம்" என்ற இரைச்சலுடன் ஒலிப்பதை உணர முடியும் என்பது சிறப்பம்சம் ஆகும்.