- முருகப்பெருமான் பூஜித்த பஞ்சலிங்கங்கள்.
- திருக்கோவில் கருவறைக்கு பின்புறம் உள்ள சன்னதியில் தரிசிக்கலாம்.
ஆறுபடை வீடு கோவில்களுள் இரண்டாம் படை வீடாக சிறப்பிக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும். இந்த கோவிலில் மூலவர் கருவறைக்கு பின்புறம் சுரங்கம் போன்ற இடத்துக்குள் அமையப்பெற்றுள்ள பஞ்சலிங்கம் சன்னதி சிறப்பு பெற்றதாகும்.
திருச்செந்தூரில் சூரர்களை சம்ஹாரம் செய்து தேவர்களை காத்து அருள்புரிந்த முருகப்பெருமான் சூரர்களை சம்ஹாரம் செய்த பாவம் நீங்கிட தானே ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தருளினார் என்று வரலாறு கூறப்படுகிறது. அப்படி முருகப்பெருமான் பூஜை செய்த ஐந்து லிங்கங்கள் தான் இன்றும் பஞ்ச லிங்கங்களாக காட்சித்தருகிறது. இதனை உணர்த்தும் விதமாக இங்கு கருவறையில் காட்சித்தரும் சுப்பிரமணியர் கையில் தாமரை மலர் ஏந்தி சிவனை பூஜிக்கும் கோலத்தில் காட்சிதருகிறார் என்பது சிறப்பம்சம் ஆகும்.
Image source: Facebook.com